Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
வெனிசில் நடனமாடிய தனுஷ்
 
.
Sunday, 06 June, 2010 02:46 PM
.
தெலுங்கில் ஹிட்டான ரெடி திரைப்படம் கன்னடத்தில் ரிமேக்காகி ஹிட்டாகி தற்போது தனுஷ் நடிக்க தமிழில் உத்தமபுத்திரன் எனும் பெயரில் ரீமேக்காகி வருகிறது.
.
ஏற்கனவே தனுஷ் நடித்த குட்டி மற்றும் யாரடி நீ மோகினி படங்களை இயக்கிய மித்ரன் கே. ஜவஹர் இந்த படத்தை இயக்கி வருகிறார். பாலாஜி ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் மோகன் அப்பாராவ், ரமேஷ் தான்ட்ரா தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக ஜெனிலியா நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் 3 பாடல் காட்சிகள் ஸ்விட்சர்லாந்து மற்றும் இத்தாலியில் படமாக்கப்பட்டன.

இத்தாலியில் உள்ள புகழ் பெற்ற வெனிஸ் நகரில் பேக் வாட்டர் பின்னணியில் ஒரு பாடல் காட்சியையும் எடுத்துள்ளனர். இந்த பாடல் காட்சிக்கு ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நடன கலைஞர்களும் நடனமாடி உள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆன்டனி இசை அமைத்துள்ளார்.
| |

மற்றவை :