Maalaisudar



 
 
 
 
 
 
 




.
மதுபாட்டீல் செட்டில் ஆட்டம்
 
.
Sunday, 09 May, 2010 11:32 AM
.
புலிவேஷம் படித்திற்காக மதுபாட்டீல்களை கொண்டு அமைக்கப்பட்ட செட்டுக்கு நடுவே மேக்னா நாயுடு ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஆர்கே வேல்டு நிறுவனம் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் ஆர்.கே. நாயகனாக நடிக்கும் படம் இது. இதில் சதா மற்றும் கார்த்திகா நடிக்கின்றனர்.
.
இந்த படத்திற்காக அண்மையில் ஒரு லட்சம் மது பாட்டீல்களை கொண்டு அட்டகாசமாக ஒரு செட் அமைத்து, பாடல் காட்சியை படமாக்கி உள்ளனர். வழக்கமாக போடப்படும் பார் செட்டுக்கு மாறாக வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இவ்வாறு மதுபாட்டீல்களை கொண்டு செட் அமைத்ததாக ஆர்.கே. கூறுகிறார்.

டாஸ்மாக் சரக்கு சரக்கு டா என துவங்கும் அந்த பாடலுக்கு மேக்னா நாயுடு கவர்ச்சிகரமாக நடனமாடி இருக்கிறாராம். இந்த பாடலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அவர் நடுவே மயங்கி விழுந்து விட்டாராம்.  அதையும் மீறி பாடலை முடித்து கொடுத்திருக்கிறார்.
| |

மற்றவை :