Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
வித்தியாசமான வில்லன்
 
.
Sunday, 18 April, 2010 02:37 PM
.
பெயருக்கேற்ப "காதலாகி' காதல் படம்தான். ஆனால் வழக்கமான காதலில் இருந்து மாறுபட்ட கதையை கொண்டது என்கிறார்
.
படத்தின் இயக்குனர் கே.ஆர்.விஷ்வா. படிக்கிற காலத்தில் தப்பு செய்பவர்கள் உண்டு தப்பு செய்யாதவர்களும் உண்டு. ஆனால் தப்பு செய்தாலும் வாழ்க்கையில் கோட்டை விடாமல் செட்டிலாகி விடும் ரகமும் உண்டு. அப்படிப்பட்ட இளைஞர்களின் கதையைதான் காதல்மயமாக பாஸிட்டிவாக சொல்லியிருக்கிறேன் என்கிறார் உற்சாகமாக. காதலிலும், வாழ்க்கையிலும் வெற்றி பெறுபவர்களின் கதை இது என்கிறார் அவர்.

கிருஷ்ணகுமார், அஜய், ரோஷன், சிருஸ்டி டாங்கே அம்ரிதா, நட்சத்திரா, கஷிஷ் கபூர் என புதுமுக பட்டாளமே நடிக்க பிரகாஷ் ராஜ் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறாராம்.அந்த கால ராஜாவாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் வித்தியாசமான பாத்திரம்தான் வில்லனாம். நாயகனோடு உரசல் இருந்து கொண்டே இருந்தாலும் நாயகனும் வில்லனும் கடைசி வரை ஒரு முறை கூட சந்தித்துக் கொள்ள மாட்டார்களாம். அப்படியொரு வித்தியாசமான கதை.

கே.கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரைஹனா 5 பாடல்களை 5 விதமாக இசையமைத்து தந்திருக்கிறார்.
| |

மற்றவை :