Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
சுழலில் சிக்கிய நாயகர்கள்
 
.
Sunday, 28 March, 2010 03:26 PM
.
தமிழ் அமுதன் தயாரிக்க, அழகு இயக்கும் படம் புழல். இந்த படத்தில்மனோ, ஹேமச்சந்திரன் மற்றும் முரளிஆகிய மூன்று பேர் நாயகர்களாக நடித்துள்ளார். இவர்களுக்கு ஜோடியாகஅஸ்வத, அர்ச்சனா மற்றும் ஜூனியர் நமீதா ஆகியோர் நடித்துள்ளனர்.
.
இந்த படத்திற்காக செம்பரம்பாக்கம் ஏரியில் ஷýட்டிங் நடைபெற்றபோது நாயகர்கள் மூவரும் டைவ்அடிக்கும் ஆசையில் ஏரியில் குதித்து சுழலில் சிக்கிக்கொண்டனராம். நல்லவேளையாக படப்பிடிப்பு குழுவினர் அவர்களை மீட்டுள்ளனர்.

அதேபோல மும்பை கவர்ச்சி நடிகை ஷோனா சிங் ஒரு பாடலுக்காக ஆடியபோது வழுக்கி விழுந்து விட்டாராம். இத்தகைய விபத்துக்களையெல்லாம் தாண்டி படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.இந்த படத்தில் 9 திருநங்கைகள் ஆடிப்பாடும் பாடல் சிறப்பு அம்சமாக இருக்கும் என்று இயக்குனர் கூறுகிறார்.

மனோபாலா, காதல் சுகுமார், பொன்னம்பலம் மற்றும் பலர் நடித்துள்ளனர். நல்ல தம்பி இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
| |

மற்றவை :