Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
சரத்தைப்போல வர வேண்டும்
 
.
Sunday, 21 March, 2010 12:52 PM
.
தம்பி அர்ஜூனா படத்தில் நடித்து வரும் பெரோஸ்கான் சரத்குமாரைப் போல வர வேண்டுமென்பது தனது விருப்பம் என்கிறார்.
.
ஜி.எம்.பாலாஜி தயாரிப்பில், ரமணா நடிக்கும் தம்பி அர்ஜூனா படத்தை விஜய் ஆர்.ஆனந்த் இயக்கி வருகிறார். அருண் பாண்டியனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், சென்னையை மையமாக கொண்ட ஆக்ஷன் படமாக இதனை உருவாக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் பெரோஸ்கான் ரமணாவின் சகோதரராக நடிக்கிறார். கேரளாவைச் சேர்ந்தவரான பெரோஸ்கான் ஒரு சில மலையாள படங்களில் நடித்திருந்தாலும் கோலிவுட்டில் கால் பதித்து பெயர் வாங்க விரும்புவதாக கூறியுள்ளார்.சரத்குமார் போலவே தோற்றம் பெற்றுள்ள அவர், நடிப்பிலும் சரத்தைப்போல பெயர் வாங்க விரும்புகிறார்.

மலையாளப் பட உலகில் சரத்குமார் பழசிராஜா படத்தின் மூலம் தனி முத்திரை பதித்திருக்கும் நிலையில் தான் தமிழ் திரைப்பட உலகிற்கு வந்திருப்பதாக பெரோஸ்கான் மகிழ்ச்சியோடு கூறுகிறார்.

இந்த படத்தில் பெரோஸ்கான் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பதாக இயக்குனரும் பாராட்டியிருக்கிறார். சுமன், ஆஷிமா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.தினா இசையமைத்துள்ளார். கோடை விடுமுறைக்கு விருந்து படைக்க இந்த படம் வெளியாக உள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆக்ஷன் காட்சிகளை உருவாக்கியிருக்கின்றனராம்.
| |

மற்றவை :