Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
ஜீவாவின் விருப்பம்
 
.
Thursday, 11 March, 2010 04:30 PM
.
கச்சேரி ஆரம்பத்திற்கு நாள் குறித்த (இம்மாதம் 19ந் தேதி ரிலீசாகிறது) உற்சாகத்தில் ஜாலியாக பேசுகிறார் ஜீவா.
ஆக்ஷன் கச்சேரி, காமெடி  கச்சேரி என எல்லாவற்றிலும் களைகட்டும் வகையில் படம் உருவாகியிருப்பதாக சந்தோஷப்படும் ஜீவா அளித்த பேட்டியிலிருந்து...

.
கேள்வி: கச்சேரி ஆரம்பம் எப்படி இருக்கும்?

பதில்: படம் செமஜாலியாக இருக்கும். வர்த்தக ரீதியான படம் வேறு. பொழுதுபோக்கான படம் வேறு. இந்த படம் முழுமையான பொழுதுபோக்கு சித்திரமாக இருக்கும்.

கே: படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக வருகிறீர்களா? பஞ்ச் டைலாக் உண்டா?

ப: தமிழ்படத்தில் எல்லோரையும் கலாய்த்தை பார்த்த பிறகு பஞ்ச் டைலாக் பேசவே பயமாக இருக்கிறது.  அதுபோன்ற விஷயங்கள் படத்தில் கிடையாது. ரசித்து பார்க்கும் வகையில் இருக்கும்.

கே: படத்தின் ஹைலைட் என்னன?

ப: நிறைய விஷயங்கள் இருக்கின்றன. வடிவேலுவுன் காமெடி அதில் ஒன்று. என்னுடைய சமீபத்திய படங்களில் காமெடி நன்றாக அமைந்து வந்துள்ளது. இந்த படத்திலும் அது தொடர்கிறது.

கே: ஐபிஎல் போட்டிக்கு நடுவே ரிலீஸ் செய்திருக்கிறீர்களே? படத்தை அது பாதிக்காதா?

ப: படத்தின் மீது அந்த அளவு நம்பிக்கை இருக்கிறது. மேலும் சிவா மனசில சக்தி வெளியான பிறகு நிறைய இடைவெளி வந்து விட்டது. இனியும் தாமதிக்க முடியாது.  நல்ல படம் எப்படியும் ஜெயிக்கும். சூப்பர் குட் பிலிம்ஸ் பேனரில் 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் படம் அல்லவா. நிச்சயம் வரவேற்பு இருக்கும்.இளைஞர்களை கவரவேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.  யூத்களுக்கு பிடித்த ஹீரோவாக மாற வேண்டும். இந்த படம் அதற்கு உதவும் என்று நம்புகிறேன்.

கே: கோ படத்தில் நடிப்பது பற்றி...?

ப: கே.வி. ஆனந்திடமிருந்து  திடீரென அழைப்பு வந்தது. அவர் கூறிய கதை மிகவும் பிடித்து விட்டது. எனவே நடிக்க ஒப்பு கொண்டேன்.இதில் போட்டோகிராபராக வருகிறேன். படத்தின் இயக்குனர் திரை வண்ணன், இந்த படத்தில் ஜீவா சிறப்பாக நடனமாடி யிருப்பதாகவும், குறிப்பாக ஒரு பாடல் காட்சியில் கால்வலி எடுக்கும்  அளவுக்கு கஷ்டப்பட்டு ஆடி அசத்தியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.படத்தின் கிளைமேக்ஸ் மாறுபட்டவகையில் அமைந்திருப்பதாகவும்  ஜீவா காட்சிக்கு காட்சி செய்யும் அலம்பல் அதிரடியாக இருக்கும் என்றும் அவர் உற்சாகமாக கூறுகிறார்.
| |

மற்றவை :