பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய 2 படங்களிலும் தீவிரமான பாத்திரங்களில் நடித்த கார்த்தி இதில் உற்சாகமான வாலிபராக நடித்து இருக்கிறார்.படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பயணத்தை அடிப்படையாகக் கொண்ட அருமையான காதல் கதையாக படம் அமைந்திருக்கிறது என்கிறார் இயக்குனர் லிங்குசாமி.
படத்தில் நடித்த அனைவருமே கடினமாக உழைத்திருப்பதாக கூறும் அவர், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ரசிகர்கள் என இருதரப்பினரையும் படம் கவரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.நாயகன் கார்த்தி நாயகி தமன்னா இருவருமே இந்த படத்தில் நடித்தது குறித்து உற்சாகமாக இருக்கின்றனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பையா திரைப்படம் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகிறது.தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தோடு இணைந்து படத்தை விநியோகம் செய்துள்ளது. ஏற்கனவே வாரணம் ஆயிரம் படத்தை விநியோகம் செய்துள்ள தயாநிதி அழகிரி தமிழ்ப்படம் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட நிலையில் இந்த படத்தை வெளியிடுகிறார்.
|