படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ள அவரே, தயாரிப்பையும் மேற்கொள்கிறார். நானே என்னுள் இல்லை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஷýவல் கம்யூனிகேஷன் மாணவரான அவரது மகன் அம்ரேஷ் கணேஷ் நாயகனாக நடிப்பதோடு, இசையமைக்கவும் உள்ளாராம். மேலும் 2 பாடல்களை எழுதி அவற்றில் ஒன்றை அவரே பாடி இருக்கிறாராம். அவரது இசையமைப்பில் பாடிய எஸ்.பி.பி., ஹரிஹரன் போன்ற பிரபல பாடகர்கள் அம்ரேஷின் இசைத் திறமையை பாராட்டியுள்ளனராம். இந்த மாதம் படப்பிடிப்பை துவக்கி ஒரே கட்டத்தில் முடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ஜெய்சித்ரா. விசு, நாசர், கங்கை அமரன், சரண்யா, குயிலி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். கதாநாயகிகளை தேடி கொண்டிருக்கின்றனராம். |