Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
நாயகனாகும் குழந்தை நட்சத்திரம்
 
.
Sunday, 14 February, 2010 12:45 PM
.
குழந்தை நட்சத்திரமாக  அறிமுக மாக கதாநாயகனாக உயர்ந்தவர்களின் பட்டியலில் மாஸ்டர் மகேந்திரனும் சேர்ந்திருக்கிறார்.
.
வானத்தை போல உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள  மகேந்திரன் இப்போது வாடா செல்லம் படத்தின் மூலம் கதாநாயகனாக மாறியிருக்கிறார்.சன் ஷைன் பிலிம்ஸ் சார்பில் ஆர்.விஜய் மற்றும் எம்.எஸ்.பாபு இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை கே.எஸ்.சரவணன் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே டான் சேர படத்தை  இயக்கியவர். இயக்குனர்  விக்ரமனிடம் உதவியாளராக இருந்த போது மாஸ்டர் மகேந்திரனை தோளில் தூக்கி வைத்திருந்தவராம்.  இளைஞனான பிறகு அவரை தானே நாயகனாக்கி இருக்கிறார்.இந்த படத்தின் கதாநாயகியாக கரோலின் நடிக்கிறார். அலெக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மகேஸ்வர் என்னும் தொழில் அதிபர் வில்லனாக நடிக்கிறாராம்.

முக்கோண காதல் கதையை  மிகவும் வித்தியாசமாக முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்ல திட்டமிட்டிருக்கிறாராம்இயக்குனர். தேவா இசையமைத்த  விரைவில் படப்பிடிப்பை  தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க  எண்ணியுள்ளனராம்.
| |

மற்றவை :