எடிட்டர் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்தபடத்தில் ஜெயம் ரவி, தமன்னா, ஷாம், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ந.முத்துகுமார் பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய சொல்பேச்சு கேட்காத சுந்தரியே என்னும் பாடலை தான் ஒரே ஷாட்டில் எடுத்துள்ளனர்.
இதற்காக புதிய உத்தி மற்றும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர். நாயகனை காதலிப்பதா? வேண்டாமா என்று நாயகி குழம்பி தவிக்கும் சூழலில் உருவான இந்த பாடலில் 15 ஜெயம்ரவி மற்றும் 5 தமன்னா தோன்றுவது போல காட்சி அமைக்கப்பட்டதாம்.
மும்பையில் இருந்து கொண்டு வரப்பட்ட அதிநவீன கேமிராவை கொண்டு இந்த காட்சி எடுக்கப்பட்டுள்ளது. நிரோ மோஷன் கன்ட்ரோல் கொண்ட கேமிரா 360 டிகிரி சுழலும் திறன் கொண்டதாம். அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு இயக்குனர் காட்சி அமைத்திருக்கிறார்.
ஷோபி மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். முழுக்க முழுக்க கம்ப்யூட்டரால் இயக்கப்படும் இந்த கேமராவை கையாள வெளிநாட்டு நிபுணர் ஒருவர் அழைக்கப்பட்டாராம்.45 மணி நேரம் படமாக்கப்பட்ட இந்த காட்சி படத்தில் நான்கரை நிமிடங்கள் இடம்பெறவுள்ளது.
படத்தின் ஹைலைட்டாக இந்த பாடல் இருக்கும் என்று ஒட்டுமொத்த படப்பிடிப்பு குழுவும் நம்புகிறது. எல்லாம் சரி பாடல்களை எப்போது கேட்கலாம் என்கிறீர்களா? அடுத்த மாதம் ஆடியோ ரிலீசாம்.