டீம் ஏடி புரொடக்ஷன்ஸ் (ஏடி-அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் குழு) சார்பில் 10 உதவி இயக்குனர்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த நாராயண் இயக்குகிறார். புதுமுகங்கள் அறிமுகமாக உள்ள இந்த படம், மாலைவேளை ஒன்றில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டது. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பிரபல இசையமைப்பாளராக விளங்கும் அச்சு, தமிழில் முதன் முறையாக இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். |