பத்ரி இயக்கும் இந்த படத்தில் பரத்துக்கு ஜோடியாக சனாகான் நடித்துள்ளார். பரத்துக்கு அண்ணனாக பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.சென்னை, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படததின் முதல் பாதி சிங்கப்பூரிலும், 2-வது பாதி சென்னையிலும் நடைபெற்றுள்ளது. சிங்கப்பூரில் வசிக்கும் பரத் தனது காதலியை தேடி சென்னைக்கு வருவது போன்ற கதையில் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இரண்டற கலந்திருப்பதாக இயக்குனர் பத்ரி கூறுகிறார். சனாகான் படத்தில் சானியா மிர்சா போன்ற டென்னிஸ் வீராங்கனையாக வருகிறாராம். தரண் இசையில் எம்ஜிஆர் படத்தின் பாடல் ஒன்று ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் எம்ஜிஆர் கெட்டப்பிலேயே பரத் தோன்றுவது படத்தின் ஹைலைட்டாக இருக்குமாம். |