18 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயசாந்திக்கு லேடீ சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்று தந்த ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’ ரீமேக்ஸ் செய்யப்படுவதும், இதில் புன்னகை இளவரசி சிநேகா நடிப்பதும் தெரிந்த விஷயமே.
.
பவானி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் இயக்குநர் ஜி.கிச்சா முதலில் சிநேகாவிடம் கதை சொன்னபோது அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லையாம்.
இப்படியொரு அதிரடி ரோல் எனக்கா? என்று சந்தேகமாக கேட்டிருக்கிறார். அதன் பிறகு கிச்சா போட்டோ செசன் நடத்திய காட்டிய பிறகும் அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லையாம்.இருப்பினும் கிச்சா உறுதியாக இருந்ததால் இதுவரை மென்மையான வேடங்களில் மட்டுமே நடித்து வந்துள்ள சிநேகா ‘பவானி’யாக நடிக்க ஒப்புக்கொண்டார்.
முதலில் தயங்கினாரே தவிர அதன் பிறகு சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நானே நடிப்பேன் என்று ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறாராம்.கிச்சாவும் அதற்கேற்ப முதலில் சண்டைக் காட்சிகளை தவிர்த்து விட்டு 2-ம் கட்டமாக சண்டை காட்சிகளை எடுத்திருக்கிறார்.
ஜி.கிச்சா தயாரித்து இயக்கும் இந்த படத்திற்கு தினா இசையமைத்துள்ளார். வில்லன் நடிகரான சம்பத் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.