புதுவசந்தம் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்து சூப்பர்குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் அவரது மகன் ஜீவா நாயகனாக நடிக்க, ஜோடியாக பூனம் பாஜ்வா நடிக்கிறார். வடிவேலு முக்கிய பாத்திரத்தில் காமெடியில் கலக்குகிறார்.
எதை கேட்டாலும் இல்லை என்று கொடுத்து விடும் பழக்கம் கொண்ட நாயகன் ஜீவா நவீன பாரிவள்ளலாக இருப்பதாகவும், அவனிடம் காதலியையே ஒருவன் கேட்கும்போது என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை என்கிறார் இயக்குனர்.
கச்சேரியைப்போல பலவகையான அம்சங்களை கொண்டு வித்தியாசமாக காட்சிகளை அமைத்திருக்கிறாராம். இமான் இசையில் பாடல்கள் படத்தின் சிறப்பம்சமாக இருக்குமாம்.வாடா வாடா பையா எனும் பாடல் காட்சியை கிட்டத்தட்ட ஒரு கோடி செலவு செய்து படம்பிடித்துள்ளனர். இந்த பாடலுக்காக ஜீவாவோடு நிஷா கோத்தாரி நடனமாடியுள்ளார். |