Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
சண்டைக்கு ரூ.1.35 கோடி
 
.
Saturday, 23 January, 2010 11:23 PM
.
தைரியம் படத்தின் நாயகன் தலைப்புக்கு ஏற்பவே தைரியமாக பல பொறுப்புகளை கையில் எடுத்துக் கொண்டுள்ளனார்.
.
ஏற்கனவே தயாரிப்பு மற்றும் படத்தின் நாயகன் ஆகிய பொறுப்புகளை சுமந்து கொண்டுள்ள குமரன் தற்போது படத்தின் இயக்குனராகவும் மாறி இருக்கிறார்.துணிச்சல் மிக்க ஒரு இளைஞன் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதுதான் கதை என்கிறார் குமரன். தீபு மற்றும் கார்த்திகா படத்தில் நாயகிகளாக நடித்துள்ளனர்.

கராத்தேவில் பிளாக்பெல்ட் பெற்ற குமரன், குதிரையேற்றம் பயின்றவராம். தன்னுடைய முதல் படமே அதிரடி, ஆக்ஷன் படமாக உருவாகியிருப்பதாக உற்சாகமாக கூறுகிறார். பாண்டியராஜன், ராதாரவி, அஜய் ரத்தினம், வாசுவிக்ரம், ஆர்த்தி, பிரகதி, மனோபாலா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கு மோகன்சிங் மற்றும் சுரேந்தர் இசை அமைத்துள்ளனர்.

ஆக்ஷன் பிரியரான குமரன் கிளைமாக்ஸ் காட்சியை அதிரடியாகவே எடுத்திருக்கிறாராம். மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி ஆலையில் 15 நாட்கள் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டதாம். 100 ஸ்டண்ட் நடிகர்களுக்கு மேல் பங்கேற்ற இந்த காட்சிக்காக மட்டும் ரூ.1.35 கோடி செலவு செய்து இருக்கிறார்.

கோவா போன்ற பெரிய படங்களின் போட்டி பற்றி கவலைப்படாமல் 29ம் தேதி தைரியம் படத்தை தைரியமாக களமிறக்க உள்ள குமரன் என்றுமே ஆக்ஷன் படங்களுக்கு வரவேற்பு இருக்கும் என்று உற்சாகமாக சொல்லுகிறார்.
| |

மற்றவை :