சீடன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நாடோடிகள் அனன்யா தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார். சுகாசினி மணிரத்தினம், பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் வருகின்றனர்.
சிறைச்சாலை, சாந்தினிபார் ஆகிய படங்களை தயாரித்துள்ள மோகன் இந்த படத்தை தயாரிக்க உள்ளார். தினா இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள இந்த படத்திற்காக பாரம்பரிய முறையிலான வீடு ஒன்றை செட் போட்டு இருக்கின்றனராம். |