சத்யாலயா பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தை முன்னணி இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய முரளிசாமி இயக்குகிறார்.
மதுரையிலிருந்து சென்னைக்கு வரும் நாயகன் பெரிய தாதாவோடு மோதும் சூழலில், காதலும்சேர்ந்து கொள்ள அதன் பிறகு ஏற்படும் பரபரப்பான திருப்பங்களை கொண்டு கதை அமைத்திருக்கிறாராம் இயக்குனர் முரளிசாமி.
சென்னையில் அவன் சந்திக்கும் போராட்டங்கள் படு விறுவிறுப்பாக இருக்குமாம். இதில் கோட்டா சீனிவாசராவ், சரண்ராஜ், ஹனிபா, பாண்டு என பலர் நடிக்க உள்ள இந்த படம் இம்மாத இறுதியில் துவங்க உள்ளது. |