அண்மையில் இந்த படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. பாடல்கள் மிகவும் சிறப்பாக வந்திருப்பதாக அனைவரும் பாராட்டினர். இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாம். எதிர்பார்த்ததை விட அதிக அளவில், பாடல் சிடிக்கள் விற்பனையாகி வருகின்றனவாம்.
இந்த படத்திற்காக தன்னை தானே புதுப்பித்து கொண்டதாக இசையமைப்பாளர் பரத்வாஜ் கூறியுள்ளார்.சரண், அஜீத் கூட்டணியில் தான் உருவாக்கியுள்ள இந்த பாடல்கள் ரசிகர்களால் ஏற்று கொள்ளப்பட்டிருப்பது மகிழ்ச்சியை தருவதாகவும் அவர் கூறியுள்ளார். |