Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
கருணாஸ் ஆடிய ஆட்டம்
 
.
Sunday, 10 January, 2010 11:37 AM
.

அம்பாசமுத்திரம் அம்பானி படத்திற்காக கருணாஸ் மற்றும் ரகஸ்சியா பங்கேற்ற பாடல் காட்சி ஒன்று  படமாக்கப்பட்டுள்ளது.இந்த பாடல் காட்சியில் 50 நடன கலைஞர்களோடு இணைந்து கருணாஸ் ஆடி அசத்தியிருக்கிறாராம்.

.
நாக்குமுக்க... பாடல் புகழ் டான்ஸ்மாஸ்டர் ஸ்ரீதரின் நடன அமைப்பில் பின்னி மில்லில் இந்த பாடலை பிரம்மாண்டமாக படமாக்கியுள்ளனராம். திண்டுக்கல் சாரதி படத்தின் வெற்றிக்கு பிறகு கருணாஸ் நாயகனாக நடிக்கும் படம் இது.  அந்த படத்தின் வசனகர்த்தா ராம்நாத் இதனை இயக்கியுள்ளார்.

கிராமத்தில் இருந்து சென்னைக்கு முன்னேறும் நோக்கத்தோடு வரும் ஒரு இளைஞனின் கதையாக இந்த படம் அமைந்திருக்கிறதாம்.  தன்னம்பிக்கையின் அவசியத்தை வலியுறுத்தும் படம் இது என்கிறார் கருணாஸ். ராஜாதிராஜா படத்திற்கு பிறகு கருணாஸ் இசையமைத்துள்ள படம் இது. வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
| |

மற்றவை :