Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
பொங்கலுக்கு "போர்க்களம்'
 
.
Wednesday, 06 January, 2010 03:15 PM
.
பொங்கலுக்கு வர உள்ள பெரிய படங்களுக்கு மத்தியில் போர்க் களத்தோடு துணிச்சலாக களமிறங்கு கிறார் புதுமுக இயக்குனர் பண்டி சரோஜ்குமார். போட்டி பலமாக இருந்தாலும், அதில் தன்னால் தாக்கு பிடிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கையோடு சொல்கிறார்.
.
ஐதராபாத்தில் பிறந்து, தாய்லாந்தில்  டைரக்ஷன் பயின்றவரான சரோஜ்குமார், தமிழில் தனது முதல் படத்தை செய்ய வேண்டும் என்ற கனவோடு போர்க்களம் படத்தை உருவாக்கியிருக்கிறார். 

படத்தின் கதைக்களம் சோதனை ரீதியிலானது என்று கூறும் சரோஜ், தமிழ் ரசிகர்கள் தான் இத்தகைய முயற்சியை வரவேற்பார்கள் என்பதால்  தமிழில் தனது முதல் படத்தை  இயக்கியிருப்பதாக  கூறுகிறார். ஹைஓல்டேஜ் ஆக்ஷன் படமாக இது இருக்கும் என்றும் அவர் காட்சி அமைப்புகளில் மட்டுமல்லாமல் அதற்கான ஒளி அமைப்பிலும் கூட வித்தியாசம் காட்டியிருக்கிறாராம்.

படம் முழுவதும் காட்சிகள் ஒரே விதமான  ஒளி அமைப்பில் அமைந்திருக்கும் என்று கூறும் அவர், இதற்கான காரணத்தை படம் பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம் என்கிறார். அதே போல போர்க்களம் பெயர் காரணம் பற்றியும் கதை புரிய வைக்குமாம்.  இதுவரை வில்லனாக நடித்திருக்கும் கிஷோர் இதில் நாயகனாக நடித்திருக்கிறார்.  ஸ்வேதா நாயகியாக நடித்திருக்கிறார்.  அதீஷ்வர், பொன்வண்ணன், டினு ஆனந்த்  உள்பட படத்தில் 7 வில்லன்களாம்.

காமெடியில் கலக்கி வரும் சத்யன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.  படத்தின் கதை வண்ணமயமானதல்ல என்பதால் சத்யன் தான் படத்திற்கு மிகவும் தேவையான ஆசுவாசத்தை அளித்திருப்பதாக இயக்குனர்  சொல்கிறார்.  பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வருகிறது. பெரிய படங்களுக்கு மத்தியில் தாக்கு பிடிக்கும் தனித்துவம் இதில் இருப்பதாக இயக்குனர் நம்புகிறார்.
 
படத்தின் நாயகன் கிஷோர் மற்றும் சத்யன் ஆகியோர் இயக்குனர் சரோஜ்குமாரின்  திறமையை மிகவும் புகழ்கின்றனர். அந்த அளவுக்கு வித்தியாசமாகவும்,  திட்டமிட்டபடி துல்லியமாகவும் காட்சிகளை எடுத்திருக்கிறாராம். பரணி மினரல்ஸ் சார்பில் டி. பாஸ்கர்ராவ் இந்த படத்தை  தயாரித்துள்ளார். ரோஹித்  குல்கர்னி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
| |

மற்றவை :