குட்டி படத்தில் பல சுவாரஸ்யமான அம்சங்கள் இருக்கின்றனவாம். படத்திற்காகவென்று ஓடும் ரெயிலில் இடம் பெறும் காட்சிக்காக ஒரு ரெயிலையே வாடகைக்கு எடுத்திருந்தனராம். மேலும் படத்தில் நாயகன் தனுசுக்கு 7 வயது முதல் 12 வயது வரை உள்ள குட்டீஸ்தான் நண்பர்களாம்.
இந்த படத்தில் பேராசிரியர் பாத்திரத்தில் திரைப்பட கல்லூரி பேராசிரியர் ரவிராஜ் நடித்திருக்கிறார். படத்திற்காக தனிமையான பகுதியில் அமைந்த வீடு தேவைப்பட, அதுபோல தேடிப்பார்த்து கிடைக்காததால் கொடைக்கானல் அருகே தண்ணீரில் பாதி, தரையில் பாதி இருக்குமாறு ஒரு வீட்டை அமைத்து படப்பிடிப்பை நடத்தினராம்.
படத்தில் கல்லூரி மாணவனாக வரும் தனுசின் காஸ்டியூம் கலக்கலாக இருக்க வேண்டும் என அவருக்காக தனியே காஸ்டியூம் டிசைனரை நியமித்திருக்கின்றனர்.இந்த படத்தில் எதிரிகளை அடிக்காமலேயே ஒரு சண்டை காட்சியில் தனுஷ் நடித்து அசத்தியிருக்கிறாராம். குத்து பாடல் ஒன்றுக்கு மேக்னா நாயுடு நடனமாடியிருக்கிறார்.விவேகா, தாமரை பாடல்களை எழுதியுள்ளனர். மற்றொரு பாடலை தனுசின் சகோதரர் செல்வராகவனே எழுதியிருக்கிறாராம். |