பழகியதே பிரிவதற்காக படத்தில் இதனை செய்திருப்பதாக இயக்குனர் படபடக்கிறார். சிவஜோதி பிலிம்ஸ் சார்பில் சிவஜோதி தயாரித்துள்ள இந்த படத்தில் செல்வம் நாயகனாகவும், தருணா நாயகியாகவும் நடித்துள்ளனர்.நாயகனை காதலித்து விட்டு நாயகி வேறொருவரை கல்யாணம் செய்து கொள்ள முற்படும் போது அவன் பொங்கி எழுந்து அவளுக்கு பாடம் புகட்டுவதுதான் படத்தின் மையக்கருவாம்.
பாக்யா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தபடத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற போது, படத்தின் தலைப்பை பலரும் பாராட்டி பேசினர். இந்த தலைப்பு காதலுக்கு மட்டுமல்ல, நட்புக்கும் பொருந்தும் என்று தெரிவித்தனர். |