Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
"குரு சிஷ்யனில்' சந்தானம்
 
.
Sunday, 03 January, 2010 11:37 AM
.
காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் சந்தானம் காட்டில் மழை என்று தான் சொல்ல வேண்டும். கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கும் சந்தானம் தற்போது "குரு சிஷ்யன்' படத்தில் வடிவேலு இடத்தில் நடிக்க இருக்கிறாராம்.சக்தி சிதம்பரம் தயாரித்து இயக்கும் இந்த படத்தில் சுந்தர் சி. மற்றும் சத்யராஜ் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர்.
.
காமெடியை மையமாக கொண்ட இந்த படத்தில் வடிவேலு நடிப்பதாக  இருந்தது. ஆனால் அவர் விலகி கொண்டு விட்டார்.இந்நிலையில்  அவரது இடத்தில் சந்தானத்தை ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிகிறது.  சந்தானத்துக்காகவென்று கொஞ்சம் கதையையும், காட்சிகளையும் கூட மாற்றியிருக்கின்றனராம்.

சந்தானம் வரும் காட்சிகள் சிரிப்புக்கு கேரண்டி என இயக்குனர் தரப்பில் கூறப்படுகிறது.இந்த படத்தில் பழைய பத்ரகாளி படத்தில் வரும் வாங்கோண்ணா பாடல் ரீமிக்ஸ் ஆவதும் தெரிந்து விஷயம் தான்.
| |

மற்றவை :