Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
பிரகாஷ்ராஜ் வரிசையில் சம்பத்
 
.
Sunday, 27 December, 2009 11:49 AM
.

"முத்திரை', "காதல் கதை', "யாவரும் நலம்', "தோரணை' என இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர், ரவுடி, அரசியல்வாதி போன்ற கேரக்டர்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் எஸ்.சம்பத். ஏ.வி.எம். தயாரிப்பில் வெளியான "எவரைனா எப்புடைனா' தெலுங்கு படத்தில் சோலோ வில்லனாக நடித்து தெலுங்கிலும் பிரபலமாகியுள்ளார்.

.
இதைத் தொடர்ந்து இரண்டு புதிய தெலுங்கு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.நாசர், ரகுவரன், பிரகாஷ்ராஜ் போல தானும் ஒரு பெரிய வில்லனாக வேண்டும் என்பதே இவரின் லட்சியம். சிறந்த வில்லனால் சிறந்த குணசித்திர நடிகராகவும் நடிக்க முடியும் என்பதை எஸ்.சம்பத் "குப்பி' (சயனைடு) "ராமேஸ்வரம்', "காஞ்சீவரம்' போன்ற படங்களில் நிரூபித்துள்ளார்.

"கண்களும் கவிபாடுதே', "365 காதல் கடிதங்கள்' போன்ற படங்களில் சோலோ வில்லனாக நடிக்கிறார். அப்பாவி படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடுகிறார். பார்த்திபனின் வித்தகன் படத்தில் குணசித்ர வேடத்தில் நடிக்கிறார். ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் "சிங்கம்' படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். ஹரியின் எல்லாப் படங்களிலும் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முதல்வன் படத்தில் அறிமுகமான எஸ்.சம்பத்துக்கு விரைவில் வில்லன்களில் முதல்வனாக வர வேண்டும் என்பதே லட்சியம். அதற்கு ஏற்ப வரிசையாக இவர் நடித்த மதராஸ் பட்டிணம், அலையோடு விளையாடு, போர்க்களம், 100வது நாள், நேசி, அகம்புறம் ஆகிய படங்கள் வெளிவர உள்ளது.
| |

மற்றவை :