Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
காமெடியில் கலக்கப்போறோம்
 
.
Sunday, 27 December, 2009 11:40 AM
.
தயாநிதி அழகிரி தமது கிளவுட்டு நைன் மூவிஸ் சார்பில் தயாரிக்கும் படம் தமிழ்படம். இப்படி வித்தியாசமான பெயரை வைத்திருப்பவர், படமும் படுவித்தியாசமாக இருக்கும் என்று உற்சாகமாக கூறுகிறார்.
.
படம் காமெடி ரகத்தை சேர்ந்தது என்றாலும் இதுவரை இல்லாத அளவுக்கு விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அளவுக்கு காமெடி கலாட்டாவாக இருக்குமாம்.தமிழ் சினிமாவின் வழக்கமான பார்முலாக்களை எல்லாம் கிண்டலடிக்கும் வகையில் இந்த படம் அமைந்துள்ளதாம்.

சி.எஸ்.அமுதன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இவர் விளம்பர நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட்டாக பணியாற்றியவர்.  சென்னை28 உள்ளிட்ட படங்களில் நடித்த  சிவா நாயகனாக நடிக்கிறார்.  மும்பையைச் சேர்ந்த தீஷா பாண்டே நாயகியாக நடிக்கிறார். கண்ணன் என்கிற புதுமுக இசையமைப்பாளர் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

பிரபல நடிகை கஸ்தூரி குத்துப்பாட்டு ஒன்றில் கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார். காமெடியை மையமாக கொண்ட படம் என்றாலும் சண்டை காட்சிகளை பிரமாண்டமாகவே படமாக்கி உள்ளனர்.

முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.  படத்திற்கான விளம்பரங்களையும் வித்தியாசமாகவே செய்து வருகின்றனர்.இந்த படத்தை தொடர்ந்து அடுத்த ஆண்டு தயாநிதி அழகிரி மேலும் 3 படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கின்றாராம்.
| |

மற்றவை :