சி.ராஜரத்தினம் தயாரிப்பில் சென்சூரி மூவிஸ் சார்பில் உருவாகும் இந்த படத்தை நாகலிங்கம் இயக்குகிறார்.விஞ்ஞான பின்னணியில் இந்த படத்தின் கதை அமைந்திருக்கிறதாம். கதைப்படி சென்னை ஐஐடி மாணவன் இறுதி ஆண்டு புராஜெக்டிற்காக அரசு அனுமதியோடு நிலவுக்கு சென்று வருகிறானாம். இப்படி விஞ்ஞான சாகசத்தை காதலோடு சேர்த்து தந்திருக்கிறாராம் இயக்குனர்.
இந்தியாவின் விண்வெளி துறை சாதனைகளை வைத்து எடுக்கப்படும் முதல் படம் என்று இயக்குனர் பெருமையோடு சொல்லி கொள்கிறார். இதில் புதுமுகம் ஷாஜி, சப்னா நடிக்கின்றனர்.இந்த படத்திற்காக ரூ. 5 கோடி செலவில் பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளும் உருவாக்கப்பட உள்ளனவாம்.தமிழகத்திலும், கேரளாவிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. |