ஆந்திர உணவுக்கு அச்சாணியாக திகழும் காரச் சுவையுடன் இங்கு உணவுகள் பரிமாறப்படுகிறது. மதிய வேளைகளில் ஆந்திர உணவு வாடிக்கையாளர்களுக்கு படைக்கப் படுகிறது.
இரவு நேரங்களில், விதவிதமான பல்சுவையுடன் கூடிய நெல்லூர் மாவட்டத்தில் சிறப்புபெற்ற சைவ, அசைவ உணவு வகைகள் வழங்கப்படுகிறது. சிம்மாபுரி ராயல பிரியாணி (காரமிக்க இறால் பிரியாணி) சிம்மாபுரி கோழி, பிரியாணி, கோழி, மீன், இறால் வகைகள் ஆந்திர ஸ்டைலில் தயாரித்து வழங்கப்படுகிறது.
ஆந்திர உணவினை ருசித்தவர் களுக்கு, இந்த உணவு திருவிழா நாக்கில் எச்சில் ஊர வைக்கலாம். ஆனால் புதிதாக இந்த உணவினை ருசிக்கும் சாப்பாட்டு பிரியர்களுக்கு, காரத்தினால், கண்களிலும், நாவிலும் சேர்த்து நீரை வரவழைத்து விடும். அந்த அளவிற்கு ஆந்திரா உணவுக்கே உரித்தான காரமசாலாக்களுடன் உணவுகள் படைக்கப்படுகிறது. இங்கு ஆந்திரா பாணியில் உடையணிந்து வரும் இளைஞர்கள் உணவு பரிமாறுவது கூடுதல் விசேஷமாகும்.
ஜமீன்தார் ரெஸ்டாரெண்டில் வரும் 27ம் தேதி வரை நடைபெறும் நெல்லூர் உணவு திருவிழா, ஆந்திரா உணவு பிரியர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். |