Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
அய்யனாராக ஆதி
 
.
Sunday, 20 December, 2009 12:55 PM
.

 மிருகம் படத்தில் அறிமுகமான ஆதி, ஈரம் படத்தின் வெற்றிக்கு பிறகு அய்யனார் படத்தில் உற்சாகமாக நடித்து கொண்டிருக்கிறார்.பஞ்சதந்திரம், காதலா காதலா உள்ளிட்ட பல படங்களை தயாரித்த பி.எல்.தேனப்பன், ஸ்ரீராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிக்கும் இந்த படத்தில் ஆதிக்கு  ஜோடியாக மீராநந்தன் நடிக்கிறார்.

.
சந்தானம், சூரி, மகாதேவன், சரண்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  இந்தி பட உலகில் பிரபலமான நடிகராக விளங்கும் ஆர்பிட் இந்த படத்தில் வில்லனாக  அறிமுகமாகிறார்.அய்யனார் என்ற பெயரில் அடுக்கடுக்கான கொலைகளை செய்யும் நாயகன், ஏன் அவ்வாறு கொலைகாரனாக மாறினான் என்பதுதான் படத்தின் கதையாம். இயக்குனர் எஸ்.எஸ். ராஜமித்ரன் வித்தியாசமான திரைக்கதை அமைத்திருப்பதாக கூறுகிறார். தமன் இசையமைத்துள்ளார்.
| |

மற்றவை :