Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
வில்லனாகும் ரமணா
 
.
Sunday, 20 December, 2009 12:33 PM
.

நாயகன் படத்திற்கு பிறகு தம்பி அர்ஜுனா படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் ரமணா, "தொட்டுப்பார்' படத்தில் வில்லனாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

.
அந்தவகையில் வில்லனாக  அவதாரம் எடுக்கும் ஹீரோக்கள் வரிசையில் ரமணாவும் சேர்ந்திருக்கிறார். தோல்பாவை தியேட்டர்ஸ் சார்பில் உருவாகியுள்ள தொட்டுப்பார் படத்தில் ரமணா அசத்தல் வில்லனாக நடித்திருக்கிறாராம்.

ஆரம்பத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியதும், ரமணா தயங்கி இருக்கிறார். பின்னர் கதையையும் அதில் தனது பாத்திரத்தையும் கேட்டுவிட்டு மனதை மாற்றிக்கொண்டு நடித்து கொடுத்தாராம்.பேரரசுவின் உதவியாளராக இருந்த நந்துதான் ரமணாவை இப்படி வில்லனாக நடிக்க சம்மதிக்க வைத்திருக்கிறார்.

இந்த படத்தில் விதார்த், லக்ஷனா ஜோடியாக நடித்துள்ளனர். அழகம்பெருமாள், சிங்கமுத்து, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் எல்லாம் கலந்த பொழுதுபோக்கு படமாக தொட்டுப்பார் அமையும் என்கிறார் நந்து.படத்தில் ரமணாவின் பாத்திரம் பேசப்படும் என்றும் நம்பிக்கையோடு சொல்கிறார்.
| |

மற்றவை :