சென்னை மாநகரச் சுற்றுலா. மாமல்லபுரம், காஞ்சிபுரம் சுற்றுலா, சக்தி தரிசன சுற்றுலா, நவ திருப்பதி கள், அறுபடை வீடு, பாண்டிய நாட்டுத் திருப்பதிகள், நவ கிரகங்கள் சுற்றுலா, தென்னிந்திய சுற்றுலா உட்பட 17 வகைச் சுற்றுலாகளையும், மாணவர்களுக்கான ஆறு சுற்றுலாக் களையும் நடத்தி வருகிறது. அவ்வப் போது பயணிகளின் வசதிக்கேற்ப புதிய சுற்றுலா திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்த சுற்றுலா பயணத்திட்டங்களில் ஒன்றுதான் ஒருநாள் திருப்பதி சுற்றுலா. ஒவ்வொரு நாளும் இந்த சுற்றுலா பேருந்து காலை ஆறு மணிக்கு சென்னை வாலாஜா சாலையிலுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, பூந்தமல்லி அருகே உள்ள மோட்டல் ஹைவேயில் பயணிகள் காலைச் சிற்றுண்டியை முடித்து விட்டு சுமார் 10 மணியளவில் கீழ் திருப்பதி சென்றடையும்.
அங்கு பயணிகள் இறங்கி தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு, ஆந்திர மாநில அரசுக்குச் சொந்தமான பேருந்து மூலம் வெங்கடேச பெருமாள் குடிகொண்டுள்ள திருமலை சென்றடையலாம்.
அங்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு தேவஸ்தானத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தங்குமிடத் துக்குச் சென்று, தாங்கள் கொண்டு வந்துள்ள செல்போன்,கேமரா உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை பத்திரமாக வைத்து விட்டு, காலணிகளையும் அங்கேயே விட்டுவிட்டு, சுற்றுலாத்துறையின் வழிகாட்டி ஒருவரின் துணையோடு திருப்பதி தேவஸ்தானம் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள சீக்கிர தரிசனப் பாதை வழியாகச் சென்று பாலாஜியை தரிசிக்கலாம். 300 ரூபாய் கட்டணம் செலுத்தி சுற்றுலா பயணி களை பத்திரமாக அழைத்துச் செல்லும் பணியை சுற்றுலாத்துறை பணியாளர் களே செம்மையாகச் செய்கிறார்கள்.
கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தைப் பொறுத்து சுமார் ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள் பெருமாள் தரிசனம் கிடைக்கிறது. அது முடிந்ததும், மீண்டும் தங்கும் அறைக்கு வந்து அவரவர் பொருட்களை எடுத்துக் கொண்டு கீழ் திருப்பதி வந்து அங்கு மதிய உணவு முடித்துவிட்டு அலமேலு மங்காபுரம் எனும் திருச்சானூர் சென்று தாயாரை தரிசித்துவிட்டு இரவு சுமார் 10 மணியளவில் சென்னை திரும்பலாம். இதற்கு வால்சோ ஏ.சி. பஸ் கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.1330, டீலக்ஸ், ஏசி பஸ் கட்டணம் ரூ.1030, சாதாரண பேருந்து ரூ.930. இந்த அற்புத ஆன்மீகச் சுற்றுலா மூலம் பத்திரிகையாளர்கள் சுமார் 50 பேர் கடந்த புதன்கிழமை திருப்பதி சென்று பாலாஜியை தரிசித்து திரும்பியது ஓர் அற்புத அனுபவம்.
சுற்றுலாத்துறையின் செயலாளர் வெ.இறையன்பு, இயக்குனர் சி.மோகன்தாஸ் அவர்களின் ஆலோசனையின் பேரில், மக்கள் தொடர்பு அலுவலர் ரவி, பத்திரிகை யாளர்களை அழைத்துச் சென்று பெருமாளை தரிசிக்கச் செய்ததுடன், சுற்றுலாத்துறையின் சிறப்புகள், திட்டங்கள் குறித்த எல்லாவித தகவல்களையும் இந்தப் பயணத்தின் போதே பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
திருப்பதிச் சுற்றுலாவுக்கு வழி காட்டியாக வந்த செல்வின் உள்ளிட்ட இந்த துறையின் பணியாளர்கள் பலம் நட்புடன் பழகியது சுற்றுலாத்துறை யின் வளர்ச்சிக்கு இதுதான் பெரும் துணை என்பதை உணர்த்தியது.
இந்த திருப்பதி சுற்றுலா உட்பட எந்தப் பகுதிக்கு மக்கள் செல்ல நினைத்தாலும் தமிழ்நாடு சுற்றுலாத் துறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தொடர்புக்கு: 25361640, 25388785. இணைய தளம்: தீதீதீ.tச்ட்டிடூணச்ஞீத tணிதணூடிண்ட்.ணிணூஞ் |