பிரண்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.சி.துரைசாமி இயக்கும் இந்த படத்தில் பிரபா மற்றும் உதயா இரட்டை நாயகர்களாக நடிக்கின்றனர். மிட்டாய் படத்தில் நடித்த உன்னி மாயா நாயகியாக நடிக்கிறார்.
சமீபத்தில் அந்தமான் தீவுகளில் 15 நாட்கள் தங்கி இரண்டு பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளார். ஒரு பாடலை பழனி பாரதியும், மற்றொரு பாடலை இயக்குனரும் எழுதியுள்ளனர்.
அந்தமானில் படமாக்கப்பட்ட பாடல்கள் எடுக்கப்பட்ட விதம் ரசிகர்களின் பாராட்டை பெறும் என்று இயக்குனர் நம்புகிறார். நட்புக்கும், காதலுக்கும் முக்கியத்து வம் கொடுக்கும் கதையைக் கொண்ட இந்த படம், பழனி, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய இடங்களில் வளர்ந்து வருகிறது. |