முதலில் நாயகி நாயகனை துரத்தி துரத்தி காதலிப்பதாகவும், அதனை ஏற்க மறுக்கும் நாயகன் பின்னர் மனம் மாறி அவளை காதலிக்கும்போது நாயகி அவனை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரை மணந்து கொண்டு விடுகிறாளாம். அதன்பிறகு நாயகன் அவளை கொலை செய்து விடும் வெறியோடு அலைந்துகொண்டிருக்க என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதையாம். இதில் புதுமுகம் செல்வம் நாயகனாகவும், புதுமுகம் தருணா நாயகியாகவும் நடிக்கின்றனர்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வது போல சாதுவான இளைஞனின் வாழ்க்கையில் காதல் புயல் வீசியதால், ஏற்படும் பாதிப்பை இந்த படம் விவரிப்பதாக இயக்குனர் சொல்கிறார்.கல்லூரி காதலை யதார்த்தமாகவே பதிவு செய்திருக்கிறாராம். |