Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
கருத்தை சொல்லும் காதல் கதை
 
.
Sunday, 06 December, 2009 12:13 PM
.

யுனைடெட் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் ஜி.தேவராஜ் தயாரித்த ஏ.சரணா இயக்கும் படம் சோக்காளி. மானாட மயிலாட நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்ற சைதன்யா மற்றும் நயனா என்னும் புதுமுகம் நடிக்கும் இந்த படத்தில் கஞ்சா கறுப்பு, அலெக்ஸ், சோனா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். கதைப்படி நாயகன் பிரபல டிவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளனாக இருப்பவனாம்.

.
எல்லா பெண்களையும் மயக்கிக்கொண்டிருக்கும் அவனை பெண் தொழிலதிபர் ஒருவர் மயக்க முற்படுவது போல காட்சி ஒன்றை வைத்துள்ளனர்.

இந்த வேடத்தில் சோனா நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த காட்சி படமாக்கப்பட்டபோது, நீச்சல் குளத்தில் சோனா கவர்ச்சி காட்டி நாயகனை மயக்க முயன்றிருக்கிறார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தில் விழுந்துவிட இயக்குனர்தான் அவரை காப்பாற்றினாராம். ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்க, நா.முத்துக்குமார் பாடல்களை எழுதியுள்ளார்.

இளைஞர்களை கவரும் வகையில் காதல் கதையாக இருந்தாலும் வலுவான ஒரு கருத்தை இந்த படத்தில் சொல்லியிருக்கிறாராம் இயக்குனர்.
| |

மற்றவை :