Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
விவசாயிகளின் கதை
 
.
Sunday, 29 November, 2009 12:16 PM
.
 "மிருகம்' படத்தை தயாரித்த கார்த்திக் ஜெய் மூவிஸ் தயாரிக்கும் படம் "நெல்லு'. பெயருக்கு ஏற்ப விவசாயிகளின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாக உள்ளது.கதையின் நாயகன் தஞ்சையில் பிறந்து வளர்ந்த விவசாயியாக இருக்கிறார். அந்த வேடத்தில் சத்யா நடித்துள்ளார். பாக்யாஞ்சலி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
.
எம்.சிவசங்கர் இயக்கும் இந்தப் படத்தில் 100 புதுமுகங்கள் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்க விஷயம்.
விவசாயிகளுக்காக போராடும் துணிச்சலான நாயகனை படத்தில் காட்டியிருப்பதாக இயக்குனர் கூறுகிறார். எஸ்.எஸ்.குமரன் இசையமைக்க உள்ளார். தற்போது கோபிசெட்டிப்பாளையத்தில் ஷýட்டிங் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

"மிருகம்' பட போலவே இந்த படத்திலும் வலுவான செய்தி இருக்கும் என்று தயாரிப்பாளர் திருப்பு ஏ.எம்.கார்த்திகேயன் கூறுகிறார்.
| |

மற்றவை :