பி.சி.சிவன் எனும் அறிமுக இசையமைப்பாளர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ்.பி.பி. மற்றும் ஜேசுதாசை இந்த படத்தில் அவர் பாட வைத்துள்ளார்.
ஜேசுதாஸ் குறிப்பிட்ட பாடல் ஒன்றை ஐந்து மணி நேரத்திற்கும் மேல் பாடி கொடுத்திருக்கிறார். பாடல் முடிந்த போது அவர், தன்னையே மறந்து கண்ணீர் விட்டு அழுதிருக் கிறார். கல்லறையில் வாழ்க்கையை துவங்க நினைக்கும் காதலர்களுக்கு ஒரு தாய் அறிவுரை கூறுவது போன்ற இந்த கதைக்கான பல காட்சிகளை கல்லறை சார்ந்த இடங்களிலேயே படமாக்கி இருக்கின்றனராம்.
நாயகன் மற்றும் நாயகிகள் உட்பட யூனிட்டே கல்லறையிலேயே தங்கி சமைத்து, சாப்பிட்டு காட்சிகளை படமாக்கி இருக்கிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நாயகன் வில்லனால் புரட்டி புரட்டி அடித்து உதைக்கப்படுகிறானாம். இந்த காட்சியின் போது நிஜமாகவே அடிஉதை விழுந்ததால் நாயகனுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டும் அவர் தொடர்ந்து நடித்து தந்திருக்கிறார்.இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. |