தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர் பாக அலைய நேரிடலாம்.
குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனை கள் சரியாகும். கணவன் மனைவிக்கி டையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும்.
பெண்களுக்கு: எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும்.
மாணவர்களுக்கு: பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளா வீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வணங்க எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.
ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கும் ரிஷப ராசியினரே இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தால் எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். வார மத்தியில் பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். வார இறுதியில் காரிய தடைகள் வரலாம். சூரிய சுக்கிரன் சஞ்சா ரம் வழக்குகளில் சாதகமான போக்கை தரும். நண்பர்களிடம் கவனமாக பழகு வது நல்லது.
தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்கு வாதங்கள் உண் டாகலாம். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளை கள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர் களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு: வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சனை தீர பாடுபடுவீர்கள். காரிய தடை, தாமதம் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு: கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கிவர பணவரத்தில் இருந்த தடைநீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.
மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
உங்களை விட உங்களை சுற்றி இருக் கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்தும் மிதுன ராசியினரே, இந்த வாரம் தொடக்கத்தில் காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். வார மத்தியிலும், இறுதியி லும் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். சூரிய, சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சனை கள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தொழில் வியாபாரத் தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர் பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத் தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.
குடும்பத்தில் இருப்பவர்களின் நட வடிக்கை டென்ஷனை ஏற்படுத் தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
பெண்களுக்கு: எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும்.
மாணவர்களுக்கு: கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாக பாடங் களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை சேவித்து வர காரிய அனுகூலம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப் படும் உயர்ந்த குணமுடைய சிம்மராசியி னரே, இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தால் வார தொடக்கத்தில் எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக் கும். வார மத்தியிலும், இறுதியிலும் பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக் கும். சூரியன் சுக்கிரன் சஞ்சாரத்தால் வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங் களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப் பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவி கள் கிடைக்கும்.
குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக் கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது.
பெண்களுக்கு: எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு: தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் வில்வ அர்ச்சனை செய்து சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
மனதில் இருக்கும் கவலைகளை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகும் குணமுடைய கன்னிராசியினரே, இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தால் வார தொடக்கத்தில் காரிய தடங்கல்கள் உண்டாகி நீங்கும். வார மத்தியிலும், வார இறுதியிலும் நற்பலன் கள் உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். சூரியன், சுக்கிரன் சஞ்சாரத்தால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமை யாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கி டையே சந்தோஷமான நிலை காணப் படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும்.
பெண்களுக்கு: மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழு பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.
மாணவர்களுக்கு: தேர்வில் கூடுதல் மதிப் பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்க ளின் ஆதரவும் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 29.11.2009 அதிகாலை 4 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி, 1.12.2009 அன்று காலை 10 மணிவரை இருப்பதால் வீண்அலைச்சல் காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாளை வணங்கி வர குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் நிலைக்கும்.
துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறும் குணமுடைய துலா ராசியினரே, இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தால் மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். வார மத்தியில் காரிய தடைகள் எதிலும் தாமதமான போக்கு காணப்படும். வார இறுதியில் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தை தருவதாக இருக்கும். சூரியன் சுக்கிரன் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக் கல் வாங்கலில் கவனம் தேவை. உங்க ளது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுதரும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுத லான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.
பெண்களுக்கு: எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணபுழக்கம் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு: உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும்.
சந்திராஷ்டமம்: 1.12.09 அன்று காலை 10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 3.12.09 பகல் 2.10 மணி வரை இருப்ப தால் வீண் அலைச்சல், காரிய தாமதம், டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை.
பரிகாரம்: ராஜராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
எப்போதும் பரபரப்பாக காணப்படும் விருச்சிக ராசியினரே இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ் வீர்கள். வார மத்தியில் ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். வார இறுதியில் காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்பட லாம். சூரியன், சுக்கிரன் சஞ்சாரம் ராசியில் இருப்பதால் கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத் தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப் பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம்.
குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கி டையே சின்னசின்ன கருத்து வேற்றுமை கள் வரும். பிள்ளைகளின் செயல்பாடு கள் ஆறுதலை தரும். வீட்டிற்கு தேவை யான பொருட்களை வாங்குவீர்கள்.
பெண்களுக்கு: அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.
மாணவர்களுக்கு: கவனத்தை சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
சந்திராஷ்டமம்: 3.12.09 பகல் 2.10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 5.12.2009 அன்று மாலை 5 மணி வரை இருப்பதால் வீண் அலைச்சல், காரிய தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
எங்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற குறிக்கோளை உடைய தனுசு ராசியினரே நீங்கள் நன்மைக்காக போராட தயங்காதவர். இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தால் மனகலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும்.
வார மத்தியில் எதிர்த்து செயல்பட்ட வர்கள் அடங்கி விடுவார்கள். பண வரத்தும், எதிர்பார்த்த படி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வார இறுதியில் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். சூரியன், சுக்கிரன் சஞ்சாரம் வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்பட லாம். கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர் களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டா கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்பு கள் கிடைக்க பெறுவார்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக் காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர் கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.
பெண்களுக்கு: மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும்.
மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 05.12.2009 அன்று இரவு முழுவதும் சந்திராஷ்டமம் இருப்ப தால் எதிலும் கூடுதல் கவனம் தேவை.
பரிகாரம்: ஷீரடி சாய்பாபாவை வணங்க மன அமைதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
மற்றவர்களின் நலனுக்காக தன் நலனை பாராமல் உழைக்கும் மகர ராசியினரே, இந்த வாரம் எதிர்பார்த்த படி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வார மத்தியில் வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். வார இறுதியில் நன்மைகள் உண்டாகும். பணவரத்து இருக்கும். நன்மைகள் உண்டாகும். பணவரத்து இருக்கும். சூரிய சுக்கிர சஞ்சாரம் வாகன யோகத்தை தரும். பெரியோர்களின் உதவி கிடைக் கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது.
தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில் இருப்ப வர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிøடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு: பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.
மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: விநாயக பெருமானை அருகம் புல்லால் அர்ச்சனை செய்து வணங்க காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
தன்னை தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடும் கும்பராசியி னரே, இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தால் மனோதைரியம் கூடும். எல்லா வகையி லும் சுகம் உண்டாகும். முயற்சிக ளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். வார மத்தியில் வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். வார இறுதியில் எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். சூரியன், சுக்கிரன் சஞ்சாரத்தால் அரசாங் கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன்,
மனைவிக்கிடையே இடை வெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும்.
பெண்களுக்கு: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு: திட்டமிட்டபடி பாடங் களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக் கிழமையில் தீபம் ஏற்றி வழிபட குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடை களை சந்திக்கும் மீனராசியினரே, இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தால் வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத் தில் பகை போன்றவை உண்டாகலாம். வாரமத்தியில் மனோ தைரியம் அதிகரிக் கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வார இறுதி யில் உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்க ளால் செலவு ஏற்படும். சூரியன், சுக்கிரன் சஞ்சாரத்தால் தந்தையு டன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப் பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர் பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர் பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.
குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடு களில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்.
பெண்களுக்கு: நம்பிக்கையுடன் காரியங் களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: திருவண்ணாமலை ஸ்ரீரமண மகரிஷியை தியானம் செய்து வணங்க குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.