அடுத்த மாதம் படம் திரைக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறும் பவித்ரன், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை மையமாக கொண்டு கதைக்களம் அமைந்திருப்பதாகவும், கடின உழைப்பை கொண்டு முன்னேற துடிக்கும் நாயகன் வாழ்க்கையில் நண்பர்களும், பெண்களும் ஒரு தொழிலதிபரும் குறுக்கிடும் போது ஏற்படும் மாற்றங்களை காட்சிகளாக அமைத்திருக்கிறேன் என்கிறார்.
தொழிலதிபரின் பாத்திரம் மூலம் கடின உழைப்பின் அருமையை அழுத்தம், திருத்தமாக கூறியிருப்ப தாகவும், பவித்ரன் நம்புகிறார்.ஒரு இளைஞனுக்கு ஏற்படக்கூடிய சவால்களையும், அதற்கான பாடங்களையும் வர்த்தகரீதியாக சித்தரித்திருப்பதாக பவித்ரன் கூறுகிறார்.இந்த படத்தில் நாயகனாக ராம் நடித்திருக்கிறார். நாயகிகளாக மிதுனா மற்றும் மீகா நடித்திருக்கின்றனர்.
இசையமைப்பாளர் தேவா உருவாக்கியுள்ள பாடல்களில் சில இப்போதே மதுரை சுற்று வட்டாரத்தில் பிரபலமாகி விட்டனவாம். குறிப்பிட்ட ஒரு பாடலை மு.க. முத்து பாடியிருக்கிறார். சூரியன் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய பவித்ரன், நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியுள்ள இந்த படம்முத்திரை பதிக்கும் என்று தீர்மானமாக நம்புகிறார். |