Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
மக்கள் கேட்ட ஒன்ஸ்மோர்
 
.
Thursday, 26 November, 2009 03:24 PM
.

 பொதுவாக படங்கள் ரிலீசாகும் போது ஏதாவது பாடல் சிறப்பாக இருந்தால் ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்பது வழக்கம்.ஆனால் மகாராஜா படத்திலோ படப்பிடிப்பு தளத்திலேயே பொது மக்கள் ஒன்ஸ்மோர் கேட்டிருக்கின்றனராம்.

.
ரவிஜெயராம் தயாரிக்கும் இந்த படத்தில் நாசர் மற்றும் சத்யா நாயகர்களாக நடித்துள்ளனர். தலைமுறைக்கு இடையிலான மோதலை மையமாக கொண்ட இந்த படத்தை  டி.மனோகரன் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் மைநேமீஸ் ராஜுவ் பேபி என்னும் பாடல் படமாக்கப்பட்டது. டி. இமான் இசையில் உருவான இந்த பாடலுக்கு நாசர் மற்றும் சத்யா ஆடிப்பாடியுள்ளனர். படமாக்கப்பட்டு கொண்டிருந்த போதே இந்த பாடலின் மெட்டு பிடித்துப்போய், பலர் நடனமாடியிருக்கின்றனர்.அவர்களில் சிலர் பாடல் முடிந்த பிறகு ஒன்ஸ்மோர் கேட்டு மகிழ்ந்துள்ளனர். அஞ்சலி, அனிதா நாயகிகளாக  நடிக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வர தயாராக உள்ளது.
| |

மற்றவை :