Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
சிம்ரன் இடத்தை பிடிப்பார் தமன்னா
 
.
Monday, 23 November, 2009 12:11 PM
.
 நடிகை தமன்னா, சிம்ரன் இடத்தை பிடிப்பார் என்று இயக்குனர் ஷங்கர் பாராட்டினார். பையா பட சிடியை வெளியிட்டு பேசிய இயக்குனர் ஷங்கர் கூறியதாவது:சில படங்கள் வசூல் ரீதியாக  ஜெயிக்கும். ஆனால் நல்ல படமாக இருக்காது. சில படங்கள் நன்றாக இருக்கும் வசூல் ரீதியாக ஜெயிக்காது.
.
நல்ல படமாகவும், வசூல் ரீதியாக வெற்றி படமாகவும் எடுக்கும் திறன் கொண்ட வெகுசில இயக்குனர்களில் லிங்குசாமியும் ஒருவர். அவருடைய படங்களில் ஒரு மெனக்கெடல் இருக்கும்.

இதனைத்தான் ரசிகர்கள் விரும்புகின்றனர். முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பால் பிரபலமானவர் கார்த்தி. நடிகை தமன்னா ஒவ்வொரு படத்திலும் சிறப்பாக நடித்து தன்னை மேம்படுத்தி கொண்டு வருகிறார். அவர் சிம்ரன் இடத்தை பிடித்து விடுவார் போலிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
| |

மற்றவை :