இந்தப் படத்தில் இதுவரை யாரும் ஏற்றிராத கதாபாத்திரத்தை கரணுக்காக உருவாக்கி கொடுத்திருப்பதாகவும் அதில் அவர் மிகவும் சிறப்பாக நடித்திருப்பதாகவும் சொல்கிறார் கவின்பாலா.படத்தின் நாயகன் ஒரு சூப்பர்மேன் இல்லை. ஆனால் நம் ஒவ்வொரு வருக்குள்ளும் இருக்கும் ஒருவன் தான் என்கிறார் அவர்.நிச்சயம் கரணின் திரை வாழ்க்கையில் இந்த படம் ஒரு மைல்கல்லாக அமையும் என்று இயக்குனர் நம்புகிறார்.
படத்தின் கதைக்களம் புதியது என்று கூறும் இயக்குனர் ராணுவம், காவல்துறை என எந்த துறையும் பயன்படுத்தாத ஒரு நூதன ஆயுதத்தை நாயகன் ஏந்தி போராடுவதாகவும் கூறுகிறார்.கரணுக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த ஹரிபிரியா நடித்திருக்கிறார். கோட்டா சீனிவாசராவ், ராஜ்கபூர், சம்பத், ஆதித்யா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கர்நாடகாவின் தொழிலதிபரும், தயாரிப்பாளருமான சங்கம் பிரகாஷ், 4 வில்லன்களில் ஒருவராக வந்து கலக்கியிருக்கிறாராம். விஜய் ஆன்ட்னி இசையமைத்திருக்கிறார்.இந்தப் படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது."நம்மவர்' படத்தில் கரணை அறிமுகப்படுத்திய கமல்ஹாசன் வீட்டிலேயே இசை வெளியீடு நடந்தது குறிப்பிடத்தக்கது.
படத்தில் இசை அமைப்பாளர் விஜய் ஆன்டனியும் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். சிநேகன் மற்றும் நெல்லை ஜெயந்தா மற்ற பாடல்களை எழுதியுள்ளனர்.கவித்துவமான ஒரு பாடலை எழுதியுள்ள நெல்லை ஜெயந்தா அந்த பாடலின் வரிகளை கேட்டு விட்டு கரண் தன்னை தொலைபேசியில் பாராட்டியதை விசேஷமாக குறிப்பிட்டு, எம்ஜிஆருக்கு பிறகு பாடல் வரிகளை ரசிக்கும் நடிகர்களின் வரிசையில் கரணும் சேர்ந்திருக்கிறார் என்று பாராட்டினார். |