வண்ணமயமாக உடையணிந்து ஊருக்குள் மைனராக வலம் வரும் நாயகன், நகரத்திலிருந்து அந்த கிராமத்திற்கு வந்து சேரும் நாயகி, இவர்களுக்கு இடையே காதல் மலர்கிறது என நீள்கிறது "கருத்தப் பையன், செவத்தப்பொண்ணு' படத்தின் கதை.
.
மிகவும் வித்தியாசமான பெயர் கொண்டுள்ள இந்தப் படத்தின் கதை வழக்கமானதாக தோன்றினாலும் காதலுக்கு வரும் இடையூறு புதுமையான கோணத்தில் காட்டப்பட்டிருப்ப தாக கூறுகிறார் இயக்குனர் நானி கிருஷ்ணன்.
மதுரை மீனாட்சி மூவிஸ் சார்பில் ஈஸ்வரப்பா தயாரிக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீபவன் நாயகனாகவும், மும்பையை சேர்ந்த ஷ்ராவனி நாயகியாகவும் நடிக்கின்றனர்.முழுக்க முழுக்க கிராமத்திலேயே இந்தப் படம் படமாக்கப்பட்டு வருகிறது.