அசின், ஜெனிலியா, த்ரிஷா வரிசையில் லஷ்மிராயும் பாலிவுட் பக்கம் போகிறார். அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்திப்படம் ஒன்றில் நடிக்க உள்ள லஷ்மிராய் அதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து எடைக் குறைப்பு முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.
.
இதன் பயனாகத்தான் உடற்பயிற்சி நிபுணரோடு அவருக்கு காதல் என வதந்திகள் உலா வந்தன. லஷ்மிராயோ இந்த செய்திகளை திட்டவட்டமாக மறுக்கிறார்.
கிசுகிசுக்கள் பற்றி தனக்கு கவலை இல்லை என்று கூறும் அவர் இந்த செய்தியால் உடற்பயிற்சி நிபுணருக்குத்தான் மிகுந்த பாதிப்பு என்கிறார்.நான் அவனில்லை பாகம்2ல் நடிக்கும் லஷ்மிராய், மலையாளம் மற்றும் கன்னட படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.மலையாளப் பட உலகில் தனக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மற்றும் அங்கீகாரம் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.