Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
மலேஷியாவில் தில்லாலங்கடி
 
.
Sunday, 15 November, 2009 11:49 AM
.
 எடிட்டர் மோகன் தயாரிக்க ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் தில்லாலங்கடி படத்தின் ஷýட்டிங்கை ஒரு மாத காலம் மலேஷியாவில் நடத்தியிருக்கின்ற னர். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான கிக் படத்தின் ரீமேக்கான இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.
.
தெலுங்கில் நடித்த அதே பாத்திரத்தில் நடிகர் ஷாம் வருகிறார். இந்த படத்திற்காக மலேஷியாவில் 30 நாட்கள் இடைவெளியில்லாமல் படப்பிடிப்பு நடந்துள்ளது.

ஏற்கனவே எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்திற்காக ஜெயம் ரவி அண்டு கோ மலேஷியாவில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறது. அதே இடங்களில் தான் இந்த படத்திற்கும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.மலேஷியாவின் நெருக்கடியான சாலைகளில் அதிரடியான சண்டைக் காட்சிகளையும் எடுத்துள்ளனராம்.

இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஜெயம் ரவி தமன்னா ஆடிப்பாடும் பாடல் காட்சி ஹைலைட்டாக இருக்குமாம்.
சென்னையில் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்கவுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் மேலும் 2 பாடல்களை படமாக்க உள்ளனர்.
| |

மற்றவை :