பேராண்மை படத்தில் நடித்த ஐந்து நாயகிகளில் ஒருவரான தனிஷ்கா இதில் நாயகியாக நடிக்கிறார்.அருண் விஜய்க்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். இந்த படத்தில் கார்த்திக் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறாராம்.
மணி ரத்னத்தின் ராவன் படத்திலும் கார்த்திக் நடித்து வருகிறார். மலை மலை படத்தில் முக்கிய வேடமேற்ற பிரபு இதில் சிறிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
மலைமலை படத்தைப்போலவே இதுவும் முழுநீள பொழுதுபோக்கு சித்திரமாகவே இருக்கும் என்று இயக்குனர் கூறுகிறார்.படத்திற்காக இரண்டு பாடல் காட்சிகளை தாய்லாந்தில் படமாக்கி யுள்ளனர். அணுஹாசன், சந்தானம், சந்திரசேகர், கஞ்சாகருப்பு, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ஜனவரி மாத இறுதியில் இந்த படம் திரைக்கு வரவுள்ளது. |