Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
நகுல் பாடும் பாட்டு
 
.
Sunday, 15 November, 2009 11:40 AM
.
கந்தகோட்டை படத்தில் நாயகன் நகுல் பாடல் ஒன்றை பாடி இருக்கிறார். பாய்ஸ் படத்தில் அறிமுகமான நகுல் அந்த படத்திலேயே பாடல் ஒன்றை பாடியிருப்பார். அதன்பிறகு அந்நியன் மற்றும் வேட்டையாடு விளையாடு ஆகிய படத்திலும் ஹாரிஜ் ஜெயராஜ் அவருக்கு பாடுவதற்கான வாய்ப்பை வழங்கினார்.
.
தற்போது ராதாமோகன் உதவியாளரான சக்திவேல் இயக்கும் கந்தகோட்டை படத்தில் நகுல் நடித்து வருகிறார். பூர்ணா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

படத்தின் இசையமைப்பாளர் தீனா இந்த படத்தில் நகுலுக்காக ஒரு பாடலை வழங்கியிருக்கிறாராம். நகுலின் இளமை ததும்பும் குரல் இந்த பாடலுக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததாக தீனா கூறுகிறார்.இந்த பாடலை நியூசிலாந்தில் படமாக்க திட்டமிட்டுள்ளனராம்.
| |

மற்றவை :