அதனை பயன்படுத்திக் கொண்டு ஆக்ஷன் காட்சிகளில் அவர் ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறாராம். ஏற்கனவே சண்டை காட்சி ஒன்றில் 60 அடி உயரத்திலிருந்து டூப் இல்லாமல் குதித்து நடித்த அவர், சமீபத்தில் சேசிங் காட்சி ஒன்றில் அதே போல டூப்பை நாடாமல் நடித்திருக்கிறாராம். படத்தின் ஓபனிங் சீனில் வரும் இந்த சேசிங் காட்சியை ராமேஸ்வரத்தில் படமாக்கி உள்ளனர்.
காட்சியின் போது கிருஷ்ணாவுக்கு பதிலாக டூப்பை பயன்படுத்தலாம் என்று ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் சொல்லியிருக்கிறார். ஆனால் கிருஷ்ணாவோ தானே நடித்திருக்கிறார். இதனால் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டாலும் அதனை பொருட்படுத்தாமல் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறார்.
பாலாஜி.டி. இயக்கத்தில் பட்டியல் சேகர், செகக் கபூர் தயாரிக்கும் இந்த படம் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது. கிருஷ்ணாவுக்கு ஜோடியாக விஜயலட்சுமி நடிக்கிறார். |