
உதவி இயக்குனராக இருந்து இயக்குனராகியிருக்கும் சத்யசீலன் கதை வசனத்தில் உருவாகியிருக்கும் படம் "காதலிக்கலாமா'.
ரேவதி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுந்தரமூர்த்தி இந்தப் படத்தை தயாரிக்கிறார். இன்றைய இளைஞர்களின் மன ஓட்டத்தையும், காதல் ஏக்கங்களையும் கதையாக சொல்லியிருப்பதாக இயக்குனர் கூறுகிறார்.இளைஞர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் நல்லதொரு கருத்தை படம் உணர்த்தும் என்கிறார் அவர்.