மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்øடை பெறும் மேஷராசியினரே இந்த வாரம் இறுதியில் எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். சந்திரன் சஞ்சாரம் வயிறு கோளாறை ஏற்படுத்தும். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதியநபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்கள் எவ்வளவு திறமையாக செயல் பட்டாலும் மெத்தனமான போக்கு காணப் படும். வியாபாரம் தொடர்பான பயணங் களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாக லாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு: வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு: கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: செவ்வாய்கிழமையில் அங்காரகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ பயம் விலகும்.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
எல்லோரிடமும் அனுசரித்து பேசும் குணமுடைய ரிஷபராசியினரே இந்தவாரம் பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். சந்திரன் சஞ்சாரத்தால் பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். வார தொடக்கத்தில் மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும்.
தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும்.
பெண்களுக்கு: எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: மகாலட்சுமியை வணங்கிவர செல்வம் சேரும். மனமகிழ்ச்சி உண்டா கும். குடும்ப பிரச்சனை தீரும்.
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
நேரத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செயல்படும் மிதுன ராசியினரே இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. சந்திரன் சஞ்சாரம் வார தொடக்கத்தில் ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். வார மத்தியில் மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற மடைய பாடுபடுவீர்கள். வார மத்தியில் எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். வார இறுதியில் சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும்.
குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும்.
பெண்களுக்கு: மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும்.
மாணவர்களுக்கு: பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: கருமாரியம்மனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
உயர்வு, தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிப்பதே குறிக்கோளாக உடைய கடக ராசியினரே இந்த வாரம் ராசியாதிபதி சந்திரன் சஞ்சாரம் ராசியிலேயே வார தொடக்கத்தில் இருப்பதால் பணவரத்து இருக்கும். மனகவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். வார மத்தியில் எதிலும் கவனம் தேவை. வார இறுதியில் புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். வார இறுதியில் புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள். குடும்பத்தில் வார மத்தியில் குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும்.
பெண்களுக்கு: காரியங்களில் ஏற்பட்ட தடைநீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும்.
மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: மாங்காடு காமாட்சி அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் உடைய சிம்ம ராசியினரே இந்த வாரம் பணதேவை அதிகரிக்கும். சந்திரன் சஞ்சாரத்தால் வீண்செலவு மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். வார மத்தியில் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். வார இறுதியில் காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம் உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவதுநல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல் களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக் காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு: மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
மாணவர்களுக்கு: பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர் களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவனையும் வணங்க எல்லா இடையூறும் விலகும். முற்பிறவி பாவம் நீங்கும்.
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
தர்மகுணமும், இரக்க சிந்தனையும் உடைய கன்னி ராசியினரே, இந்த வாரம் எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். சந்திரன் சஞ்சாரத்தால் நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர் களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் வார இறுதியில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவை யான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள்.
பெண்களுக்கு: கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும.
மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: ஸ்ரீஐயப்பனை வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்ப்புகள் அகலும்.
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
ஆடை ஆபரணத்தையும் அலங்காரத் தையும் விரும்பும் துலாராசியினரே இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். சந்திரன் சஞ்சாரத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல் பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வார மத்தியில் பணவரத்து இருக்கும். வார இறுதியில் இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும்.
தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும்.
பெண்களுக்கு: எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம்.
மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தியை வணங்கி வர குடும்ப பிரச்சனை தீரும். காரிய தடை விலகும்.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
சோர்வில்லாமல் எப்போதும் உற்சாகமாக காணப்படும் விருச்சிக ராசியினரே இந்த வாரம் உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். சந்திரன் சஞ்சாரத்தால் நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி கரமாக இருக்கும். மனவருத்தத் துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள்.
பெண்களுக்கு: பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
சந்திராஷ்டமம்: 8.11.2009 அன்று காலை 8.45 மணி வரைசந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: ஞாயிற்று கிழமையில் மாரியம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட காரிய தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
எந்த ஒரு காரியத்திலும் லாபநஷ்டம் பார்க்கும் குணமுடைய தனுசு ராசியினரே இந்த வாரம் விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். சந்திரன் சஞ்சாரத் தால் மனகுழப்பம் உண்டாகலாம். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். வாரமத்தியில் பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வார தொடக்கத்தில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். வார இறுதியில் எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக் கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.
பெண்களுக்கு: காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும்.
மாணவர்களுக்கு: யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங் களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
சந்திராஷ்டமம்: 8.11.2009 அன்று காலை 8.45 மணி முதல் 10.11.2009 அன்று பகல் 11.10 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் தடை தாமதம், வீண் அலைச்சல் இருக்கும். கவனமாக செயல்படுவது நல்லது.
பரிகாரம்: வடலூர் ராமலிங்க சுவாமிகளை வணங்கி வர மனஅமைதி உண்டாகும். எல்லோரும் உங்களிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள்.
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
திடபுத்தியும், பலவழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறமையும் கொண்ட மகரராசியினரே இந்த வாரம் பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். வார மத்தியில் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டா கலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக் கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.
பெண்களுக்கு: சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.
மாணவர்களுக்கு: கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம்.
சந்திராஷ்டமம்: 10.11.2009 பகல் 11.10 மணி முதல் 12.11.2009 பகல் 2 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும்.
பரிகாரம்: விநாயகபெருமானை அருகம் புல்லால் அர்ச்சனை செய்து வணங்க காரிய தடைகள் விலகி அனுகூலமான பலன் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
இருதரப்பு வாதங்களையும் கேட்டு அதன்பிறகே நியாயத்தை சொல்லும் குணமுடைய கும்பராசியினரே, இந்த வாரம் எதிர்ப்புகள் நீங்கும். சந்திரன் சஞ்சாரம் நோய்களை நீக்கி உடல் ஆரோக்கியத்தை தரும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில்வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வார இறுதியில் அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன், மனைவிக் கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு: உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்.
மாணவர்களுக்கு: கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 12.11.2009 பகல் 2 மணி முதல் 14.11.2009 அன்று மாலை 6.25 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும்.
பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு சனிக்கிழமையில் நல்லெண்ணை தீபம் ஏற்றுவதும் உடல் ஆரோக்கியத்தை தரும். குடும்ப பிரச்சனை தீரும்.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
பிரச்சனை என்று வரும் போது அதில் சிக்காமல் சாமர்த்தியமாக நழுவும் திறமை உடைய மீனராசியினரே,இந்தவாரம் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். சந்திரன் சஞ்சாரத்தால் எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் வார மத்தியில் சரியாகும். பிள்ளை களுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக் காக பாடுபட வேண்டியும் இருக்கும்.
பெண்களுக்கு: உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு: எவ்வளவு திறமையாக படித்தாலும்பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும்.
சந்திராஷ்டமம்: 14112009 அன்று மாலை 5.25 மணி முதல் அன்று இரவு முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பகவானை முல்லை மலர் சாற்றி, நெய்தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். |