Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
ரமணா நடிக்கும் காந்தி கணக்கு
 
.
Wednesday, 04 November, 2009 03:33 PM
.

 சசியிடம் உதவியாளராக பணிபுரிந்த சம்பத் ஆறுமுகம் இயக்கும் "காந்தி கணக்கு' படத்தில் ரமணா நாயகனாக நடிக்கிறார். பூஜா பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தில் லொள்ளு சபா ஜீவா, தயாரிப்பாளர் ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  
 
.
நாயகியை தேடிக்கொண்டு இருக்கின்றனராம். ரிஷால் சாய் இசையமைக்கிறார். ஏற்கனவே தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களுக்கு இசையமைத்த அனுபவம் பெற்றவர் இவர். மகாத்மா அகிம்சையை ஆயுதமாக பயன்படுத்தி வெற்றிபெற்றார். அதே போல தற்போது மக்களை வாட்டிக் கொண்டு இருக்கும் பிரச்சனைகளுக்கு காந்திய வழியில் நாயகன் தீர்வு காண்கிறாராம்.

அதனைத் தான் தலைப்பாக "காந்தி கணக்கு' என வைத்திருப்பதாக இயக்குனர் சம்பத் ஆறுமுகம் கூறுகிறார். ஊட்டி, கோவா என "காந்தி கணக்கு' வளர இருக்கிறது. படத்தின் பாடல் காட்சி ஒன்றை லண்டன் நகரில் முக்கிய வீதிகளில் எடுக்க திட்டமிட்டுள்ளனராம். 
| |

மற்றவை :