கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் எண்டர்டைன்மென்ட் சார்பில் ஏற்கனவே சிம்புதேவனின் இரும்புகோட்டை, முரட்டுசிங்கம், ஆர்யா நடிக்கும் மதராசாபட்டினம் மற்றும் பலே பாண்டியா ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் 4 புதிய படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். எல்லாமே மெகா நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவாக உள்ள படங்கள். ஒரு படத்தை பாலா இயக்க, விஷால் மற்றும் ஆர்யா நடிக்கின்றனர்.
மற்றொரு படத்தில் ஜெயம் ரவி நடிக்க, பிரபுதேவா இயக்க இருக்கிறார். மாசிலாமணி இயக்குனர் ஆர்என்ஆர் மனோகர் இயக்கத்தில் ஒரு படமும், அயன் இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் மற்றொரு படமும் உருவாக உள்ளது.
இதில் நடிக்கும் நட்சத்திரங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது. |